1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் கைது..!

Q

மதுரையில் போலிஸ் ஸ்டேசன் மீது தாக்குதல்.

தாக்கப்பட்ட வி.சத்திரபட்டி போலிஸ் ஸ்டேசனை பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கைது

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை மதுரை அருகே போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்தை இன்று ஆர்.பி. உதயகுமார் பார்வையிடச் சென்றார். அதற்கு அங்கிருந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆர்.பி. உதயகுமார், தனது ஆதரவாளர்களுடன் அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து ஆர்.பி. உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

 


 

null


 மதுரை மாவட்டம் பேரையூர் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு குற்றவாளி பிரபாகரன் தனது கூட்டாளிகளுடன் சென்று சூறையாடி இருக்கிறார்.  இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் இந்த பிரபாகரன் குறித்து வழக்கம்போல் விசாரிப்பதற்காக காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது தந்தையிடம் விசாரித்துள்ளனர். தன் வீட்டில் இல்லாத போது தன் தந்தையை மிரட்டி உள்ளதாக கூறி பிரபாகரன் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். தனது கூட்டாளிகளுடன் நாம் இருந்த காவலரை அவர் தாக்க முற்பட்டபோது அவர் அங்கிருந்து ஒரு அறைக்குள் சென்றுள்ளார். தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த பிரபாகரன் காவல் நிலையத்தில் இருந்த வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.  

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், சூறையாடப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிடுவதற்காக சென்று உள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போலீஸாருக்கும் ஆர்பி உதயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆர்பி உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like