சும்மா இந்த இடத்திற்கு வரல... சிறையில் இருந்து வந்ததும் டிடிஎஃப் வெளியிட்ட வீடியோ .!
யூடியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன் பைக்கில் சாகசங்களை செய்து அதற்கான வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் அவருடைய கையில் பலத்த அடி ஏற்பட்டது. இதனையடுத்து. டிடிஎப் வாசன் அதி வேகத்தில் சென்றதால் விபத்து நடந்தாக கூறப்பட்டது.
இதனால் பொது மக்களுக்கு அச்சறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் வாகனம் ஓடியதாக 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நேற்று புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் இருந்து வெளியே வந்தார்.
நேற்று நிபந்தனை ஜாமீன் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக யூடியூப் சேனலில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விபத்து நடந்தது குறித்தும் தான் மிகவும் கடினமாக உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் எனவும் எமோஷனலாக பேசி இருக்கிறார்.
வீடியோவால் பேசிய யூடியூபர் டி.டி.எஃப் வாசன் ” சிலர் நினைப்பார்கள் நான் இந்த இடத்திற்கு சும்மா வந்துவிட்டேன் எனக்கு என்ன யூடியூபில் 4 மில்லியன் பின்பற்றுவோர்கள் இருக்கிறார்கள், எனக்கு என்ன கவலை என்று நினைப்பார்கள். ஆனால், இந்த 4 மில்லியன் சும்மாக வரவில்லை அதற்காக எவ்வளவு உழைத்தேன் என்று எனக்கு தான் தெரியும். நான் சரியாக சாப்பிடமாட்டேன் தூங்கமாட்டேன். ஒரு வீடியோவை எடுத்தால் அதனை எடிட் செய்யும் வேலைகள் இருக்கிறது நிறைய வேலைகள் இருக்கிறது. இப்படி நான் கடினமாக உழைக்க போய் தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய டி.டி.எஃப் வாசன் நான் வீலிங் செய்தது தான் விபத்துக்கு காரணம் என சொன்னார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் வெகு தூரமாக பைக் ஒட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த காரணத்தால் என் கைகள் மிகவும் வலி எடுத்து. எனவே, எங்கையும் நிற்கவே முடியாத ஒரு ரோட்டில் தான் வந்துகொண்டு இருந்தேன். எதிர்பாராத விதமாக நான் ஆக்சிலேட்டரை திருப்பினேன் வண்டியின் சிசி அதிகமாக இருந்த காரணத்தால் வண்டி தூக்கி விட்டது.
தூக்கியவுடன் தான் வண்டியை நிலைப்படுத்த நான் வண்டியை குலுக்கினேன் ஆனால் நிலைப்படுத்த முடியவில்லை எனக்கு ஸ்டண்ட் தெரியும் என்ற காரணத்தால் நான் அப்பகுதியில் இருந்த இடத்தில் குதித்துவிட்டேன். மற்றபடி வேணுமென்றே வீலிங் செய்து எனக்கு விபத்து ஏற்படவில்லை” என கூறிஉள்ளர். டிடிஎப் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பேசும் வீடியோவுடன் விபத்து நடப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்ற வீடியோ காட்சிகளையும் இணைத்து வீடியோ வெளியீட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.