இன்று இதை மட்டும் பண்ணுங்க குடும்பத்தோட தலையெழுத்தே மாறும்..!

சஷ்டி திதி முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற திதியாகும். மாதத்திற்கு வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சஷ்டி திதிகள் வரும். இதில் வளர்பிறை சஷ்டி என்பது வளர்ச்சியை, வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக் கூடிய நாளாகும். அனைத்து மாதங்களிலும் வரும் சஷ்டி திதியிலும் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷ பலன்களை தரும்.
சஷ்டியை போல் முருகப் பெருமானுக்குரிய மற்றொரு விரத நாள் கிருத்திகை நட்சத்திரம் ஆகும். கிருத்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. முருகப் பெருமானின் அருளை பெற விரும்புபவர்கள் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருக்கலாம். இது முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட விரத நாள் என்பதால், இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த முறை மாசி மாதத்தில் முருகப் பெருமானுக்குரிய வளர்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். மாசி மாத வளர்பிறை சஷ்டி, மார்ச் 05ம் தேதி புதன்கிழமை கிருத்திகை நட்சத்திரத்துடன் வருகிறது. முருகப் பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவதால் இது இரட்டிப்பு பலன் தரக் கூடிய நாளாகும். இது விநாயகப் பெருமானுக்குரிய புதன்கிழமையுடன் இணைந்து வருவது இன்னும் அதிக சிறப்பாகும். இந்த நாளில் ஒரு எளிய பரிகாரத்தை மட்டும் செய்து, முருகப் பெருமானை வழிபடுவதால் நம்முடைய தலையெழுத்து மட்டுமின்றி, நமது குடும்பத்தின் தலையெழுத்தே மாறும் என சொல்லப்படுகிறது.
மார்ச் 04ம் தேதி இரவு 08.15 மணிக்கு துவங்கி, மார்ச் 05ம் தேதி மாலை 05.47 வரை சஷ்டி திதி உள்ளது. அதே போல் மார்ச் 05ம் தேதி காலை 07.20 மணிக்கு துவங்கி, மார்ச் 06ம் தேதி காலை 04.54 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. அன்றைய தினம் பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும், காலை 6 மணி முதல் 07.30 வரை எமகண்டமும் உள்ளன. இதனால் மார்ச் 05ம் தேதி ராகு காலம், எமகண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் வளர்ச்சி என்பதே இல்லை, பல விதமான கஷ்டங்களில் இருந்து மீள முடியாமல் இருக்கிறோம், கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ளோம் என்கிறவர்கள் இந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும் ?
மார்ச் 05ம் தேதியன்று வீட்டின் பூஜை அறையில் வாழை இலையை தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி விட்டு, முருகப் பெருமான் படத்திற்கு முன் வைக்க வேண்டும். சிறிய அளவில் இலை இருந்தாலும் பரவாயில்லை. அந்த இலையின் மீது ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் பஞ்சு திரி போட்டு, சுத்தமான பசும் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். வாழை இலையில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். அதே போல் நெய்யில் மகாலட்சுமியும், தீபச் சுடரில் சிவ பெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து முருகப் பெருமானுக்கு விளக்கேற்றும் போது அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். முருகப் பெருமானுக்கு விருப்பமான மலர் சூட்டி, ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து, மனதார உங்களின் கோரிக்கையை சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் நடக்கும்.
பகலில் இந்த வழிபாட்டினை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு கூட செய்யலாம். அந்த நேரத்தில் சஷ்டி திதி இல்லையே என நினைக்க வேண்டாம். கிருத்திகை நட்சத்திரம் இருப்பதால் அந்த நேரத்தில் தாராளமாக செய்யலாம். வீட்டில் உள்ள மற்ற விளக்குகள் எவ்வளவு நேரம் எரிகிறதோ, அவ்வளவு நேரம் இந்த விளக்கும் எரிந்தால் போதும். ஒரு விளக்கு ஏற்ற முடிந்தவர்கள் ஏற்றலாம். அல்லது ஆறு வாழை இலை துண்டுகள் வைத்து அவற்றின் மீது ஆறு அகல் விளக்குகள் வைத்தும் விளக்கேற்றலாம். இரண்டும் ஒரே பலனையே கொடுக்கும். மார்ச் 06ம் தேதி அன்று காலை விளக்கை எடுத்து தனியாக வைத்து விட்டு, அந்த இலையை கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இப்படி செய்வதால் வாழ்க்கையில் கஷ்ட நிலை என்பது மாற துவங்கும்.