#JUST IN : திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா..!
தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், அன்வர் ராஜா, இந்த மாதத்தில் முதல் வாரத்தில், "தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.இது குறித்து, பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததில், அன்வர் ராஜாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டது.
இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்கு முன்பே, இன்று அன்வர் ராஜா திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.இதனையடுத்து, அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்குவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா