1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி..!

Q

காவல்துறையினர் விசாரணையின் போது காவலாளி அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அஜித்குமார் குடும்பத்தினரிடம் அமைச்சர் பெரியகருப்பன் அளித்தார்.

Trending News

Latest News

You May Like