1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பிரபல நடிகர் கலாபவன் நவாஸ் மர்ம மரணம்!

Q

பிரபல காமெடி நடிகர் கலாபவன் நவாஸ் மிமிக்ரி மேடை மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது முதல் படம் சைதன்யம், இது 1995 இல் வெளியிடப்பட்டது. மிமிக்ஸ் ஆக்‌ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், மாட்டுப்பெட்டி மச்சான், சந்தமாமா, மற்றும் தில்லானா தில்லானா போன்ற படங்களில் அவர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். நட்சத்திர அமைப்பான AMMA இன் சமீபத்திய பொதுக்குழு கூட்டத்திலும் நவாஸ் கலந்து கொண்டார். 

'பிரகாம்பனம்' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடித்துள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கலாபவன் நவாஸ் அவர் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஆனால், நேற்று படப்பிடிப்பு முடித்ததால், நவாஸ் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்கான கலாபவன் நவாஸ், ஹோட்டல் ஊழியரிடம் பேருந்து மற்றும் ரயில் நேரம் குறித்து விசாரித்து உள்ளார். இதுகுறித்து, நவாஸில் தெரிவிப்பதற்கான அந்த ஊழியர் சென்ற போது, நடிகர் தனது அறையில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஓட்டல் ஊழியர்கள் அவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட ஓட்டலில் போலீசார் ஆய்வு செய்து, சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது அறையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என்பது ஆரம்ப முடிவு.

நவாஸின் திடீர் மறைவு திரைப்படத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Trending News

Latest News

You May Like