1. Home
  2. தமிழ்நாடு

ஒரே ஒருமுறை முதலீடு...மாதம் தோறும் வருமானம் : எஸ்பிஐயின் அசத்தல் திட்டம்..!

1

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மக்களின் நன்மதிப்பை பெற்று விளங்கி வருகிறது. இவற்றில் சேமிப்பு திட்டங்களுக்கான பல்வேறு ஆப்ஷன்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தங்களுக்கு உகந்த மற்றும் விருப்பமான சேமிப்பு திட்டங்களை மக்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒரே ஒருமுறை முதலீடு செய்து மாதம் தோறும் வருமானம் பெரும் சூப்பர் திட்டம் ஒன்று வெளியாகி உள்ளது.

எஸ்பிஐ வங்கியின் வருடாந்திர டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அப்போது ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் வசதி கிடைக்கும்.வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை என்றாலும், சிறப்பு என்னவென்றால் வங்கியால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 75 சதவீதம் வரை கடன் வழங்கவும் வசதி உள்ளது. எனவே இங்கே நீங்கள் தேவைக்கேற்ப கடன் பெறலாம்.

இதில் நீங்கள் செய்யும் டெபாசிட் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் வரையிலான கால வரம்பைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இங்குள்ள வட்டி விகிதமும் அதே காலத்தின் நிலையான வைப்புத்தொகைக்கு சமமாக இருக்கும். ஆனால் மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுகிறது.

மேலும் மூத்த குடி மக்களுக்கு கூடுதலான வட்டி விகிதம் வழங்கப்படுவது சிறப்பானதாக உள்ளது. முதலீடு செய்யும் நபர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் பணத்திற்கான நாமினி எந்த வரமும் இல்லாமல் பணத்தை முன்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக 15 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கப்படும். மற்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் வருடாந்திர தொகையில் 75% முன்கூட்டியே பயனர்கள் பெற்றுக்கொள்ள வசதி வழங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like