1. Home
  2. தமிழ்நாடு

2000 ரூபாய் இருந்தால் போதும்..! லாபத்தை வாரி வழங்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!

1

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் இணைந்து முதலீடு செய்து வருகிறது. அந்த வகையில் தபால் அலுவலக திட்டத்தில் டெபாசிட் செய்யும் போது மெச்சூரிட்டி காலம் வரை நல்ல வட்டி கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் தங்களால் இயன்ற அளவு தொகையை ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்யலாம்.

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சிறிய தொகையை டெபாசிட் செய்து ரிட்டனாக மிகப்பெரிய லாபம் கிடைக்கும். முதலீடு செய்த தொகையுடன் வட்டியும் முதிர்வு காலத்திற்கு பின் கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ. 100 டெபாசிட் செய்து தபால் அலுவலக RD திட்டத்தில் கணக்கு ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு தற்போது தபால் அலுவலத்தில் 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டு வ்ருகிர்த்து. 5 ஆண்டுகள் தொடர்ந்து ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம்.

தபால் அலுவலக RD திட்டத்தில் ஒருவர் மாதந்தோறும் ரூ. 2,000 முதலீடு செய்யும் போது ஐந்து ஆண்டுகளில் டெபாசிட் செய்யப்பட்ட்ட தொகை ரூ.1,20,000 இருக்கும். இதற்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தில் 22,732 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதன் மூலமாக முதிர்வு காலத்திற்கு பின் ரூ. 1,42,732 மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர் பெற்றுக் கொள்ளலாம்.

இதே திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 முதலீடு செய்யும் போது 1,80,000 ரூபாய் டெபாசிட் தொகையாக இருக்கும். இதற்கு வட்டி மூலமாக ரூ. 34,097 கிடைக்கும். இதன் மூலமாக மெச்சூரிட்டிக்கு பின் ரூ. 2,14,097 கிடைக்கும். அதே போல் 5,000 ரூபாய் டெபாசிட் செய்யும் போது ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட தொகையாக ரூ. 3,00,000 இருக்கும். இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 3,56,830 ரிட்டனாக முதலீட்டாளர் பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி குறைந்த முதலீட்டில் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் நல்ல லாபத்தை பெறலாம். அத்துடன் டெபாசிட் செய்யப்படும் தொகையை பொறுத்து இத்திட்டத்தில் வருமானம் கிடைக்கும். ஆன்லைனிலும், ஆப்லைனில் தங்களுக்கு அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலத்திற்கு சென்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like