#JUST IN : பிரதமர் மோடி தலைமையிலான 17வது மக்களவை கலைப்பு..!
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கூட்டம் மக்களவையை கலைக்கப் பரிந்துரைத்த கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அதன்படி, தேர்தல் ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பிக்கள் பதவியேற்றுக் கொள்வர்.
மேலும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை அளித்துள்ளது.