1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும்... ஊட்டி முழுவதும் டூர் போகலாம்..!

1

கோடை காலத்தில் செல்வதற்கென தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் மலை பிரதேசங்களான திருநெல்வேலியின் மாஞ்சோலை, சேலத்தின் ஏற்காடு, நீலகிரியின் ஊட்டி, திண்டுகல்லின் கொடைக்கானல், தேனியின் தென்மலை என பிரபலமான பல இடங்கள் உள்ளன. கேரளாவில் வயநாடு, மூணாறு போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகள் செல்ல விரும்புவார்கள். 

மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் கோடை கால சீசன் தற்போதே தொடங்கி உள்ளது. இதனை அடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரசுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.

முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம்,  தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது. 

இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாய், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like