1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர் திட்டியதால் பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்தால் கால் எலும்பு முறிவு..!

1

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பொன்ராணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் விவசாய தொழில் செய்து வருகிறார். ஆறுமுகத்தின் மூத்த மகள் அன்பு சந்தியா (15) கொங்கராயக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தார்.

jump

இம்மாதம் 26ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், கடந்த மாதம் நடந்த பருவத்தேர்வில் அன்பு சந்தியா மதிப்பெண் குறைந்துள்ளதாக சந்தியாவின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். பொதுத்தேர்வு வரப்போகிறது என்றும், நீ நன்றாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கூறுவதாகவும் சந்தியாவின் தந்தை ஆறுமுகம் சந்தியாவை திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அன்பு சந்தியா மதிய இடைவேளையின் போது பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே விழுந்து பலத்த காயமடைந்த சந்தியாவை அருகில் இருந்த ஆசிரியர்கள் கருங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Nellai

இதையடுத்து மாணவி அன்பு சந்தியா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் 10-ம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like