1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் : பிரதமர் மோடி

1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலனை இன்று விண்ணில் ஏவப்படுகிறது.இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலனுடன் எல்எம்வி 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான இருபத்து ஐந்தரை மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் 14 ஜூலை 2023 எப்பொழுதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3 நமது மூன்றாவது சந்திரப் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்,” என்று ட்வீட் செய்துள்ளார். இதனிடையே பிரான்சில் பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருக்கும் வரலாற்று நிகழ்வையும் உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.


 

Trending News

Latest News

You May Like