1. Home
  2. தமிழ்நாடு

நீதிபதி கலையரசன் குழு அறிக்கை! பயமா அல்லது மர்மமா ? கேள்விக்கணைகளால் துளைக்கும் மு.க.ஸ்டாலின் !

நீதிபதி கலையரசன் குழு அறிக்கை! பயமா அல்லது மர்மமா ? கேள்விக்கணைகளால் துளைக்கும் மு.க.ஸ்டாலின் !


நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி 10% உள்ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றாதது ஏன்? என தமிழக அரசுக்கு திகக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற ‘கொலைகார’ நீட் தேர்வு கூடவே கூடாது என்பதுதான் தி.மு.கழகத்தின் நிலைப்பாடு.

ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம், நாட்டின் வருங்காலத் தலைமுறையாம் மாணவர் சமுதாயத்திற்குப் புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழக அரசு அமைத்த நீதிபதி பி.கலையரசன் குழு, மருத்துவக் கல்லூரிகளில் 10% இடங்களை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது.

அந்தப் பரிந்துரையைத் தமிழக அரசு அப்படியே ஏற்றிருந்தால் மொத்தமுள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களான 4,043-ல் 404 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதியரசரின் பரிந்துரைக்கு மாறாக, தன்னிச்சையாக, அதை 7.5 சதவீதமாகக் குறைத்தது. இதனால் 300 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

அதிமுக அரசின் இந்தத் தன்னிச்சையான, பொறுப்பற்ற செயலால் 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை இப்போதே பறிபோய்விட்டது.நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்த 10 சதவீதத்தை எந்த அடிப்படையில் 7.5 சதவீதமாக எடப்பாடி அரசு குறைத்தது? இதுதான் ஏழை எளிய மாணவர்களுக்குச் செய்யும் நீதியின் லட்சணமா?

இதுபற்றி சட்டப்பேரவையில் கழக உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, மாசிலாமணி ஆகியோர் கேள்வி எழுப்பியபோது முதல்வர் பழனிசாமி மவுனம் சாதித்தாரே தவிர; பதிலே சொல்லவில்லை.

அதுமட்டுமல்ல, நீதிபதி கலையரசன் குழுவின் அறிக்கையை இன்றுவரை சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யவில்லை. பொதுவெளியிலும் வைக்காததன் மர்மம் என்ன ? யாருடைய அச்சறுத்தலுக்குப் பயந்து நடுங்கி பம்முகிறது பழனிசாமி அரசு? என தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Trending News

Latest News

You May Like