கொரோனா பாதிப்பால் நீதிபதி மரணம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நீதிபதி அஷுதோஷ் மொஹண்டா உயிரிழந்தார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்த அஷிதோஷ் நிரந்தர நீதிபதிகள் பட்டியலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தற்போது நீதித்துறையிலும் உயிரை பறித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
newstm.in