1. Home
  2. தமிழ்நாடு

பொறியியல்‌ படிப்புகளில்‌ மாணவர்கள் சேர !! அமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு !!

பொறியியல்‌ படிப்புகளில்‌ மாணவர்கள் சேர !! அமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு !!


பொறியியல்‌ படிப்புகளில்‌ சேர இன்று மாலை 6 மணி முதல்‌ ஆன்லைனில்‌ பதிவு செய்யலாம்‌ என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த கூடுதல் அறிவிப்பு பிளஸ்‌ 2 தேர்வு முடிவுகள்‌ வெளியான பிறகு அறிவிக்கப்படும் என்றும் ,

பொறியியல்‌ படிப்புகளில்‌ சேர ஆகஸ்ட்‌ 16ந்‌ தேதி வரை மாணவர்கள்‌ பதிவு செய்யலாம்‌ என்றும் , அக்டோபர்‌ 15ந்‌ தேதிக்குள்‌ கவுன்சிலிங்கை முடிக்க ஏற்பாடுகள்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளதாகவும் , சான்றிதழ்களை சரிபார்க்க தமிழகம்‌ முழுவதும்‌ 52 மையங்கள்‌ அமைக்கப்பட உள்ளதாகவும் செல்போன்‌ மூலமாக மாணவர்கள்‌ சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்யும்‌ வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம்‌ முழுவதும்‌ 465 கல்லூரிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கான கவுன்சிலிங்‌ நடைபெறும்‌ என்றும், கடந்த ஆண்டை காட்டிலும்‌ இந்த ஆண்டு மாணவர்‌ சேர்க்கை அதிகம்‌ இருக்கும்‌ என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like