உடனே சேருங்க! இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்..
வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்டவையில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நல்ல லாபத்தையும், உத்தரவாதமான வருமானத்தையும் பெறலாம். மேலும், இந்தியாவில் வசிக்கும் எவரும் குறைந்த முதலீட்டில் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கை துவங்கலாம்.
தபால் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெறலாம். 5 வருடத்தில் ரூ.28 லட்சம் வருமானம் இந்த திட்டத்தில் கிடைக்கும். நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. ஒருவர் இந்த திட்டத்தின் கீழ் கணக்கை துவங்க விரும்பினால் அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் கீழ் கணக்கை துவங்கலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதலீடு செய்து கணக்கை துவங்கலாம். அதிகபட்ச டெபாசிட்டிற்கு வரம்பு எதுவும் கிடையாது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு தபால் அலுவலகத்தில் தற்போது 7.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்திற்கு 5 ஆண்டுகள் கால அளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் ஒருவர் தனியாகவும் அல்லது இரண்டு, மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்காகவும் துவங்கலாம். குழுந்தைகளின் பெயரிலும் அவர்களது பெற்றோர்கள் பாதுகாவலராக இருந்து டெபாசிட் செய்யலாம். குறைந்த ரிஸ்க் உள்ள திட்டம் இது. மேலும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். இதனை மொத்தமாகவோ அல்லது தொடர்ந்து மாதம் மாதம் ஐந்தாண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் 7.7 சதவீத வட்டி விகிதத்தின் படி ரூ. 6,73,551 தொகை கிடைக்கும். இதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மொத்தமாக ரூ. 21,73,551 தொகையை முதலீட்டாளர் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.