1. Home
  2. தமிழ்நாடு

உடனே சேருங்க..! மாதந்தோறும் ரூ. 9000 தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்...!

1

ஓய்வுக்கு பிறகு வருமானம் தரும் சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியின் அடிப்படையில் மாதந்திர வருமானம் பெறலாம்.

போஸ்ட் ஆபீஸ் மாதந்திர வருமான திட்டத்தில் மொத்தமாக ரூ. 9 லட்சம் முதலீடு செய்யும் போது மாத வருமானமாக ரூ.9,250 கிடைக்கும். இத்திட்டத்தில் முதலீட்டாளர் தனது துணைவியருடனும் இணைந்து முதலீடு செய்யலாம். அவ்வாறு ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யும் போது, மாதந்தோறும் அதே வருமானத்தை பெறலாம்.

ஓய்வுக்கு பின் வருமானத்தை இழக்க விரும்பாதவர்களுக்கு இத்திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். போஸ்ட் ஆபீஸ் தற்போது மாதந்திர வருமான திட்டத்திற்கு தற்போது 7.4% வட்டி வழங்கி வருகிறது. குறைந்தபட்சமாக ரூ. 1000 டெபாசிட் செய்து இத்திட்டத்தில் இணையலாம். நிலையான வைப்பு போன்ற பிற நிலையான வருமான திட்டங்களை விட மாதந்திர வருமான திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது. அத்துடன் உறுதியான வருமானமும் உள்ளது.

இத்திட்டத்தில் மாதந்திர வருமானம் ரூ.9,250 உடன் முதிர்வு காலத்திற்குப் பிறகு, அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். தபால் அலுவலக மாதந்திர வருமான திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இதனை 15 ஆண்டுகள் வரையும் நீட்டிக்கலாம். முன்கூட்டியே இத்திட்டத்தின் கணக்கை மூடவும், ஒரு வருடம் கழித்து பணத்தை எடுக்கவும் முடியும். அதே நேரம் ஒரு வருடத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால் முதலீட்டு தொகையில் இருந்து 2 சதவிகிதம் அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like