ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்..!

மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இவரை கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோவை அழைத்து வரப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஜான் ஜெபராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.