1. Home
  2. தமிழ்நாடு

WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா..!

1

90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோவாக திகழ்ந்த ஜான் சீனா, WWE-யில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.47 வயதான ஜான் சீனா, 2025 ஏப்ரல் மாதம் நடைபெறும் ரெஸ்டல் மேனியா 41 போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.டோராண்டோவில் நடந்த மனி இன் தி பேங்க் பிரீமியம் லைவ் நிகழ்வின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது ஒரு புதுவிதமான டி-ஷர்ட்டை அணிந்திருந்த ஜான் சீனா,  அதில் 'தி லாஸ்ட் டைம் இஸ் நவ்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடைசியாக ரெசில்மேனியா போட்டியில் ஜான் சீனா பங்கேற்பார் என கருதப்பட்டது. இருப்பினும், மனி இன் தி பேங்க் மீடியா நிகழ்ச்சியில் பேசிய ஜான் சினா, ரெஸில்மேனியா 41 ஷோ ஆஃப் ஷோ  தனது இறுதித் தோற்றமாக இருக்கும் என்றும், டிசம்பர் 2025 வரை மல்யுத்தம் செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும்” தெரிவித்தார்.

மல்யுத்த போட்டிகள் மட்டுமல்லாமல் பல ஹாலிவுட் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஜான் சீனா.அண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை அறிவிக்க இவர் ஆடை இல்லாமல் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.சீனாவின் ஓய்வு WWE ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like