1. Home
  2. தமிழ்நாடு

ட்ரம்ப்பை கோமாளி என்று அழைத்த ஜோ பிடன்!

ட்ரம்ப்பை கோமாளி என்று அழைத்த ஜோ பிடன்!


அமெரிக்காவில் நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது, ஜோ பிடன், ட்ரம்பை கோமாளி என அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரமான வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் தொடங்கி உள்ளது.

ஓஹியோ மாநிலம் கிளீவ்லேண்டில் நேற்று நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தொற்றின் போது மிகப்பெரிய பெரிய பேரணிகளை டிரம்ப் ஏன் நடத்தினார் என்று பிடன் கேட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நான் சொல்வதை மக்கள் கேட்க விரும்புவதால் நடத்தியதாக பெருமையாக கூறினார்.

ஜோ பிடன் தொடர்ந்து டிரம்பைத் தாக்கி பேசினார். அவரை முற்றிலும் பொறுப்பற்றவர் என்று கடுமையாக விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட டிரம்ப், நீங்கள் கூட்டத்தைப் கூட்ட முடிந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள். ஆனால் உங்களால் முடியாது, அப்படி கூட்டத்தை கூட்ட யாராலும் முடியாது, என கூறினார்.

பின்னர் பிடன் டிரம்பை ஒரு "கோமாளி" என்று அழைத்தார். இந்த கோமாளியிடம் இருந்து எந்த வார்த்தையையும் பெறுவது கடினம், இவரை மன்னியுங்கள் என்று பிடன் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like