தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வேலை வாய்ப்பு! கடைசி தேதி அக்டோபர் 30!

மத்திய பொது சேவை ஒளிபரப்பு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பிரசார் பாரதியின் சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலைய செய்திப்பிரிவில் காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் ,தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம்:சென்னை
பணி: உதவி செய்தி ஆசிரியர்,செய்தியாளர், செய்தி வாசிப்பாளர்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை https://doordarshan.gov.in/ddpodhigai என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அக்டோபர் 30 ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இயக்குநர்(செய்தி),
மண்டல செய்திப்பிரிவு,
பொதிகை தொலைக்காட்சி நிலையம்,
சுவாமி சிவானந்தா சாலை,
சேப்பாக்கம்,
சென்னை - 600 005