பெண்கள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு..! உடனே விண்ணப்பீங்க..!
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சென்னையில் வசித்து வரும் பெண்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
பெண்கள் உதவி மையத்தில் உள்ள வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
கூடுதல் தகுதியாக விண்ணப்பதார்கள் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: மாதம் ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை;
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://chennai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையான விவரங்களுடன் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை,
சென்னை – 01.
இமெயில் முகவரி : oscnorthchennai@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 05, 2025 மாலை 5 மணி வரை