விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் வேலை வாய்ப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..!

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (டிஜிசிஏ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள Deputy Chief Flight Operations Inspector (Aeroplane), Senior Flight Operations Inspector (Aeroplane), Flight Operations Inspector (Aeroplane) & Flight Operations Inspector (Helicopter) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 23.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
DGCA காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Deputy Chief Flight Operations Inspector (Aeroplane) – 5 பணியிடங்கள்
- Senior Flight Operations Inspector (Aeroplane) – 9 பணியிடங்கள்
- Flight Operations Inspector (Aeroplane) – 36 பணியிடங்கள்
- Flight Operations Inspector (Helicopter) – 12 பணியிடங்கள்
விமானப் போக்குவரத்து இயக்குநரக கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10+2/ Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
08.08.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
- Deputy Chief Flight Operations Inspector (Aeroplane) – ரூ.9,30,100
- Senior Flight Operations Inspector (Aeroplane) – ரூ..7,46,000
- Flight Operations Inspector (Aeroplane) – ரூ.5,02,800
- Flight Operations Inspector (Helicopter) – ரூ.2,82,800
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 23.08.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.