கூட்டுறவு சங்கத்திற்கு உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள உள்ளிட்ட சங்கங்களில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் இப்பணிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இப்பணிக்கு எழுத்து தேர்வு டிசம்பர் 24ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இதன் பின்னர் நேர்காணல் நடத்தப்படும். இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் https://drbtvmalai.net என்ற இணையதளத்தின் மூலம் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 170 மதிப்பெண்களுக்கு 200 வினாக்களுடன் எழுத்து தேர்வு நடத்தப்படும். 85:15 என்ற எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் விகிதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அதிக விவரங்களை https://drbtvmalai.net என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.