1. Home
  2. தமிழ்நாடு

ஊர்காவல் படையில் வேலை : 10வது பெயில் ஆனவங்க கூட அப்ளை பண்ணலாம்!

1

ஊர்காவல் படையில் சேர 50 வயதுக்குள் இருக்கும் தகுதி உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு அதில் தேர்சி பெறாவிட்டாலும் பரவா இல்லை. அதன்படி, சென்னையில் வசிக்கவேண்டும் மற்றும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும்.

அதன்பிறகு, தேர்ச்சி பெற்ற ஆண்களை போலீசாருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மற்றும் பகல், இரவு ரோந்து பணிகளில் அமர்த்தப்படுவார்கள். தேர்ச்சி பெற்ற பெண்களை பகல் ரோந்து பணி மட்டுமே ஒதுக்கப்படும். மேலும், பெண்கள் ரோந்து பணியில் ஈடுபடுவோருக்கு 560 சிறப்பு படியாக வழங்கப்படும் என்று ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை ஊர்காவல் படையில் சேர சைதாப்பேட்டை போலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம். விண்ணபங்களை நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம். மேலும், இந்த விண்ணபங்களை 31-08-2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குற்றப் பின்னனி இல்லாதவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
  • ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க  18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள்தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.

ஊதிய விவரம்

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு  சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.

பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

 சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,

சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,

அண்ணா சாலை,

சைதாப்பேட்டை,

சென்னை-15 

தொடர்பு - 044 2345 2441/ 2442)  

Trending News

Latest News

You May Like