1. Home
  2. தமிழ்நாடு

Rs.2,05,700/- மாத சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!

1

சென்னை  உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Interpreter பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் MHC  சென்னை உயர்நீதிமன்றம்
வேலை பிரிவு நீதிமன்ற வேலைகள்
வேலைவாய்ப்பு வகை Interpreter – மொழிபெயர்ப்பாளர்
தொடக்க தேதி 30.06.2024
கடைசி தேதி 29.07.2024

மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்: Interpreter பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Interpreter (மொழிபெயர்ப்பாளர்)

தமிழ் மற்றும் தெலுங்கு – 5

ஹிந்தி – 1

கன்னடம் – 1

மலையாளம் – 1

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:
SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM – அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Others / Unreserved categories – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

In-Service candidates – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

மேற்கண்ட மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஏற்ற மொழிகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Interpreter ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-22 அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:

Examination fee – ரூ.1000/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)

Interpreter தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Trending News

Latest News

You May Like