ஜியோ அறிமுகப்படுத்திய 3 புதிய OTT ப்ரீபெய்ட் பிளான்கள்..!
ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள் ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த மூன்று பிளான்களில் ஒரு பிளான் இப்போது இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது.
ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் பிளான்:
ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய ரூ.329 ப்ரீபெய்ட் பிளான் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது மற்றும் தினசரி 1.5 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த புதிய பிளான் மூலம் கிடைக்கும் மற்ற நன்மைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS ஆகியவை அடங்கும். நீங்கள் இந்த பிளானில் 5G வெல்கம் ஆஃபரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் ஏமாற்றமடைவீர்கள். ஆனால், நீங்கள் JioSaavn Pro-ன் கூடுதல் பலனை பெறுவீர்கள். OTT பெனிஃபிட்ஸ்களில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான ஃப்ரீ அக்சஸ் அடங்கும்.
ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் பிளான்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய ரூ.949 ப்ரீபெய்ட் பிளானானது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB டேட்டா உள்ளிட்ட நன்மைகளுடன் வருகிறது. இந்த புதிய பிளானின் வேலிடிட்டி மொத்தம் 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த பிளான் 90 நாட்களுக்கு பிரபல OTT பிளாட்ஃபார்மான Disney+ Hotstar மொபைலின் பெனிஃபிட்ஸ்களை வழங்குகிறது. அதேபோல ரூ.329 பிளானை போலல்லாமல், இந்த பிளான் ஜியோவின் 5G வெல்கம் ஆஃபரை வழங்குகிறது.
ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் பிளான்:
ரூ.949 பிளானை போலவே, ஜியோவின் ரூ.1049 பிளானும் 84 நாட்கள் வேலிடிட்டி பீரியடை கொண்டுள்ளது. இந்த பிளான் தினமும் 2GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-களை யூஸர்களுக்கு வழங்குகிறது. ஜியோ டிவி மொபைல் ஆப் மூலம் SonyLIV மற்றும் ZEE5 ஆகிய OTT நன்மைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பிளானுடன் அன்லிமிட்டெட் 5G ஆஃபரும் உள்ளது. கட்டண உயர்வுக்குப் பிறகான புதிய ஜியோ திட்டங்களில் மேற்கண்ட மூன்று புதிய பிளான்களை தவிர அப்டேட் செய்யப்பட்ட ரூ.999 பிளானும் அடங்கும்.
.png)