வந்தாச்சு ஜியோ ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா?

ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய கட்டண விவரத்தை கீழே விரிவாக காணலாம்.
ஜியோ ஹாட்ஸ்டாரை மொபைல் போனில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 3 மாதத்திற்கு கட்டணம் ரூபாய் 149 ஆகும். இதுவே ஓராண்டுக்கு சந்தாதாராக வேண்டும் என்றால் ரூபாய் 499 கட்டணம் ஆகும்.
ஜியோஹாட்ஸ்டாரை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் பயன்படுத்த இந்த திட்டம் ஏற்ற திட்டம் ஆகும். அதாவது, மொபைலிலும், வீட்டில் உள்ள தொலைக்காட்சியிலும் ஜியோ ஹாட்ஸ்டாரை பயன்படுத்த இந்த திட்டம் ஏதுவான திட்டம் ஆகும். மொபைல், தொலைக்காட்சி, டேப்ளட் என ஏதாவது இரண்டு சாதனத்தில் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். 3 மாதத்திற்கு இந்த திட்டத்திற்கு 299 ரூபாய் ஆகும். அதேசமயம் ஓராண்டுக்கு இந்த திட்டத்திற்கு சந்தாதாரராக ரூபாய் 899 கட்டணம் ஆகும்.
ஜியோ ஹாட்ஸ்டாரின் பெரிய திட்டம் இந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் சந்தாதாரர் ஆகும் பயனாளர் ஹாட்ஸ்டாரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் விளம்பரம் இல்லாமல் பார்க்க இயலும். ஆனால், நேரலை நிகழ்ச்சிகளில் விளம்பரம் ஒளிபரபரப்பாவதைத் தவிர்க்க முடியாது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் ஜியோ ஹாட்ஸ்டாரை காண இயலும். இந்த திட்டத்திற்கு மாதந்தோறும் ரூபாய் 299 கட்டணம் ஆகும். ஆண்டிற்கு ரூபாய் 1499 கட்டணம் ஆகும்.
இந்த திட்டங்கள் மட்டுமின்றி சூப்பர் திட்டம் மற்றும் ப்ரிமியம் திட்டத்திற்கு டால்பி அட்மோஸ் ஆடியோவும் ஜியோ ஹாட்ஸ்டாரால் வழங்கப்படுகிறது. அதேபோல, வீடியோவின் தரமும் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்றாற்போல மாறுபடுகிறது.