1. Home
  2. தமிழ்நாடு

வந்தாச்சு ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்..! ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ பயணிக்கலாம்!

1

எரிபொருள் விலை உயர்வு, காற்று மாசு உள்பட பல்வேறு பிரச்சனைகள் சுற்றுச்சூழல் துறையில் உள்ள நிலையில், மக்களுக்கு ஒரு சிறந்த போக்குவரத்து சாதனம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

48 வாட்ஸ் லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த சைக்கிள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை இயக்கலாம் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது, குறிப்பாக இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படை மாடல் எலக்ட்ரிக் சைக்கிள் முதல், அடுத்தடுத்த பல திறன்களை கூட்டப்பட்ட சைக்கிள்கள் வரை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அடிப்படை சைக்கிள் விலை ரூ.15000வரை இருக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கிள் விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் மூலமும் இந்த சைக்கிளுக்கு ரூ.900 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், முதல் கட்டமாக முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like