1. Home
  2. தமிழ்நாடு

வரும் செப்.19 முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை அறிமுகம்..!

1

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ஜியோ ஏர்ஃபையர் சேவை குறித்தும் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான அறிமுக பணிகளை பல மாதங்களாக செய்துவந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை அடுத்த 2 வருடத்தில் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது.  நிறுவனங்களுக்கு மட்டும் அளித்துவந்த ஜியோ ஏர்ஃபையர் திட்டம் தற்போது வீடுகளுக்கும் ஜியோ ஸ்மார்ட்ஹோம் சேவை வழங்க உள்ளது. 

ஜியோ ஏர்ஃபைபர்க்காக உருவாக்கப்பட்டு உள்ள கருவியில் 5G technology, Wi-Fi 6 ஆகியவை செயல்படுத்தக்கூடியவை. இதுமட்டும் அல்லாமல் இந்த கருவி மூலம் ஜியோ செட் டாப் பாக்ஸை இணைக்க முடியும். Jio AirFiber மூலம் 1000 சதுரடி வரையிலான வீட்டில் அல்லது ஒரே floor-ல் இருக்கும் அலுவலகத்தில் 1.5 Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவையை அளிக்க முடியும்.

Trending News

Latest News

You May Like