நகைப்பிரியர்கள் 'ஷாக்'.. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை..!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் அக்டோபர் 18ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,19ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று(அக்.,20) ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில், இன்று(அக்.,21) சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 10,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.