1. Home
  2. தமிழ்நாடு

நகை பிரியர்கள் மகிழ்ச்சி! தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு 800 ரூபாய் குறைவு..

Q

தங்கம் விலை நேற்று குறைந்து நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 100 ரூபாய் குறைந்து, ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ரூ.53,200-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,529-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 82 ரூபாய் குறைந்து, ரூ.5,447-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 97,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.96,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like