நகை பிரியர்கள் குஷி! ஒரே நாளில் ரூ.320 குறைவு!

பிப்ரவரி மாதம் தொடக்கம் முதலே பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் உள்ளது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்திருந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,050க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் ரூ.8050க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.40 குறைந்து ரூ.8,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.