1. Home
  2. தமிழ்நாடு

நகை பிரியர்கள் மகிழ்ச்சி..! 4 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!

1

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இல்லத்தரசிகள், சுப நிகழ்ச்சி வைத்து இருக்கும் குடும்பத்தினர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்  இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கடந்த செவ்வாய் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் 46,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.480 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

 இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.45,920-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,710-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.4,702-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like