நகை பிரியர்கள் மகிழ்ச்சி..! 3வது நாளாக குறைந்த தங்கம் விலை..!
ஆகஸ்ட் 11ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,375க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,320-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹560,நேற்று ₹640, இன்று 40 என மொத்தம் மூன்று நாளில் ₹1240 சவரனுக்கு குறைந்துள்ளது.
.png)