நகை பிரியர்கள் ஷாக்..! ரூ. 72,300-ஐ கடந்த 1 சவரன் தங்கம் விலை..!

நகைப் பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக்! ரூ. 72,300-ஐ கடந்த 1 சவரன் தங்கம் விலை..!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்ற சூழல் நிலவுவதன் காரணமாக, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200