நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! சவரனுக்கு 328 ரூபாய் உயர்வு..!.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.32 குறைந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.41 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 10 கிராம் ரூ.66,660-க்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல் 100 கிராம் ரூ.6,66,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.38 குறைந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.44 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.7,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.352 விலை உயர்ந்து ஒரு சவரன் (8 கிராம்) ரூ.58,176-க்கும், 10 கிராம் 72,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,460-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.43,680-க்கும், 10 கிராம் ரூ.54,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.0.70 குறைந்த நிலையில் நேற்றும் என்றும் அதே விலையில் நிடீக்கிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50க்கும் 10 கிராம் 945-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.