நகை பிரியர்கள் ஷாக்..! குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
தமிழகத்தில் நேற்று (மே 15) தங்கம் விலை கிராமுக்கு, 195 ரூபாய் குறைந்து, 8,610 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,560 ரூபாய் சரிவடைந்து, 68,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மே 16) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் ரூ.69,760க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைந்த நிலையில் இன்று (மே 16) ரூ.880 அதிகரித்துள்ளது.
இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.