நகை பிரியர்கள் அதிர்ச்சி..! மீண்டும் எகிறிய தங்கம் விலை..!
நம் நாட்டில் இம்மாத துவக்கத்தில் இருந்து, தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 20), ஆபரண தங்கம் கிராம், 8,710 ரூபாய்க்கும், சவரன், 69,680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
நேற்று (மே 21), ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 220 ரூபாய் உயர்ந்து, 8,930 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,760 ரூபாய் அதிகரித்து, 71,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,975க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்கி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.