நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..! தங்கம் விலை 1 லட்சத்தைத் தொட்டது..!
IBA வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல் 22, 2025 காலை 7 மணி நேர நிலவரப்படி 24 காரட் தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹97,560 ஆக இருக்கிறது. இதில் 3% ஜிஎஸ்டி சேரும் போது, விற்பனை விலை ₹1,00,468.80 ஆகிறது. இது தங்க விலை முதன்முறையாக ₹1 லட்சத்தை தொட்டிருக்கும் முக்கிய தருணமாகும்.
இதேநேரத்தில், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹89,430 ஆகவும், அதற்கு 3% ஜிஎஸ்டி சேரும் போது விற்பனை விலை ₹92,112.90 ஆகவும் உள்ளது. இந்த உயர்வான விலை நிலவரம், தங்கம் மீது உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இது சதமடித்துள்ளது.
வெள்ளியின் விலை உள்ளிட்ட புள்ளிவிவரங்களும் சர்வதேச சந்தையின் பாதிப்பை காட்டுகின்றன. IBA வலைதளத்தின் தகவலின்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹95,720 ஆகும் என பதிவாகியுள்ளது. இது கடந்த சில வாரங்களில் வெள்ளியின் தேவை மற்றும் சந்தை நிலவரத்தையும் பிரதிபலிக்கிறது.