நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..! தொடர்ந்து உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
தங்கம் எப்போதும் சாமானிய மக்களின் முக்கிய சேமிப்பாகவே இருந்து வருகிறது. எதிர் வரும் காலங்களில் தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளியில் தங்களது சேமிப்பை தொடங்குவார்கள். ஆனால் இன்றைய நிலவரப்படி வெள்ளி விலையும் வரலாறு காணாத விலை உயர்வை தொட்டு வருகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 10 கிராம் ரூ.66,800-க்கும், 100 கிராம் ரூ.6,68,000-க்கும் விற்பனை ஆகின்றது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.16 உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.38 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.7,287-க்கும் அதேபோல் சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் (8 கிராம்) ரூ.58,296-க்கும், அதேபோல் (10 கிராம்) 72,870-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,472-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.43,776-க்கும், (10 கிராம்) ரூ.54,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 பைசா குறைந்த நிலையில் இன்று ரூ.0.80 பைசா உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.95.80 க்கும் 10 கிராம் 958-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,800 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.