நகை பிரியர்கள் நிம்மதி -இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை அண்மைக்காலமாக அதிரடியாக உயர்வதும், பின்னர் சீரான விலையில் இறங்குவதாக இருந்தது. ஒரு கட்டத்தில் சவரன் ரூ.75,000த்தை கடந்து பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி, ஒரு சவரன் தங்கம் ரூ.75,760 என்ற உச்ச நிலையை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியிருந்தாலும், அதிக விலையிலேயே விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையாகியது. (ஆகஸ்ட் 13) மேலும் குறைந்து பதிவாகி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு எந்த மாற்றமும் இன்றி ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,290 க்கும் விற்பனையாகிறது.
.png)