1. Home
  2. தமிழ்நாடு

நகை வாங்குவோர் ஷாக்..!தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு..!

W

உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. இந்த நிலையில் நேற்று (மே 12) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.8750-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (மே.13) ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.8,765க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து, ரூ.70,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.70,840க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.8,885க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109 என்றே தொடர்கிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like