நகை வாங்குவோர் ஷாக் ..! தொடர் உயர்வில் தங்கம் விலை..!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருவதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவோர்கள் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (பிப். 22 தேதி) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,045க்கும், ஒரு சவரன் ரூ.64,360க்கும், விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (பிப்.24ஆம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,055க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமேதும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.