நகை வாங்குவோர் கவலை..! வெறும் 4 நாட்களில் 1000 ரூபாய் மேல் உயர்ந்த தங்கம் விலை..!

வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,280-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,070-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது குறிப்பிடக்கத்தக்கது
இன்று (பிப்ரவரி 20) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,070 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
20/பிப்ரவரி/2025 - ரூ. 64,560
19/பிப்ரவரி/2025 - ரூ. 64,280
18/பிப்ரவரி/2025 - ரூ. 63,760
17/பிப்ரவரி/2025 - ரூ. 63,520
16/பிப்ரவரி/2025 - ரூ. 63,120
15/பிப்ரவரி/2025 - ரூ. 63,120
14/பிப்ரவரி/2025 - ரூ. 63,920
13/பிப்ரவரி/2025 - ரூ. 63,840
12/பிப்ரவரி/2025 - ரூ. 63,520
11/பிப்ரவரி/2025 - ரூ. 64,480
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,09,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது