காதலுக்காக ரூ.564 கோடிக்கு பங்களா கட்டிய ஜெப் பெசோஸ்..!!

இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஆன்லைன் வர்த்தக துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் அமேசான். இதனுடைய நிறுவனரான ஜெஃப் பெசோஸ் உலகளவில் மூன்றாவது பணக்காரரராக உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மனைவி மெக்கென்சி ஸ்காட்டிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அந்த சமயத்தில் அவருடைய விவகாரத்து செய்தி உலகளவில் பெரும் பேசுபொருளானது. அதற்கு பிறகு லாரன் சான்செஸ் என்பவரை காதலிக்கத் தொடங்கினார் ஜெஃப் பெசோஸ்.
இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வது, நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பது, ஷாப்பிங் செய்வது, ஜிம்மில் வொர்க்-அவுட் செய்வது போன்ற பல புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அப்போது தான் ஜெஃப் பெசோஸ் காதலி லாரன் சான்செஸ் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின. சில நாட்கள் கழித்து இருவரும் தங்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இதற்காக காதலிக்கு மிகவும் விலை உயர்ந்த வைர மோதிரத்தை ஜெஃப் பெசோஸ் அணிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தனது வருங்கால மனைவிக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இந்தியன் க்ரீக் தீவில் இருக்கும் ஒரு பங்களாவை ஜெஃப் பெசோஸ் வாங்கியுள்ளார். இதனுடைய மதிப்பு ரூ. 564 கோடி என்று தெரியவந்துள்ளது.
கடந்த 1965-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா, 1985-ம் ஆண்டு புணரமைக்கப்பட்டுள்ளது. மிகவும் விசேஷமான சிறப்பம்சங்கள் கொண்ட இந்த பங்களாவை மிகவும் கஷ்டப்பட்டு ஜெஃப் பெசோஸ், தனது காதலிக்காக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2.8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடைக்கும் இந்த பங்களா 9259 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவில் 3 படுக்கை அறைகளும், 3 குளியல் அறைகளும் உள்ளன.
ஏராளமான சொகுசு வசதிகள் கொண்ட இந்த பங்களாவை ஜெஃப் பெசோஸ் பல கோடிக்கு புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை வழங்கி காதலை வெளிப்படுத்தினார். தற்போது காதலிக்காக சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.