குருவாயூர் கோவிலில் கோலாகலமாக நடந்த ஜெயராம் மகன் திருமணம்..!
காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில் நேற்று காலை நடந்தது.
காளிதாஸ் ஜெயராம் சிவப்பு நிற வேஷ்டி, தங்க ஜரிகையுடன் கூடிய துண்டு அணிந்திருக்க, மணமகள் தாரிணி தங்கநிற எம்பிராயிடு செய்யப்பட்ட சிவப்பு நிற சேலை மற்றும் துளசி மாலைஅணிந்து இருந்தார்.
மந்திரங்கள் முழங்க இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது. திருமண விழாவில் மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி, கேரளா சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மே மாதம் இதே குருவாயூர் கோவிலில் ஜெயராம் மகள் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
#KalidasJayaram ties the knot with longtime girlfriend #TariniKalingarayar at Guruvayur temple !!! 🩷✨
— Mollywood BoxOffice (@MollywoodBo1) December 8, 2024
pic.twitter.com/tdp6y3PBbn
.png)