தீபாவளிக்கு ஜெயம்ரவியின் பூமி திரைப்படம் சன் டிவியில் வெளியிட திட்டம்.!!!
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை பதித்த நடிகர் ஜெயம் ரவி.தற்போது இவரது நடிப்பில் உருவாகி வந்த பூமி என்கிற திரைப்படம் வருகிற தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படத்தை இயக்கிய இயக்குனர் லட்சுமணன் இந்த படத்தை இயற்றியுள்ளார்.
பூமி திரைப்படம் நடிகர் ஜெயம்ரவி உடைய 25-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி யாக நிதி அகர்வால் நடித்துள்ளார் இது நிதி அகர்வால் தமிழில் முதல் திரைப்படமாகும். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை டி இமான் இசை அமைத்துள்ளார்.
முதலில் பூமி படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது ஆனால் அவர் தரப்பில் கூறப்பட்ட தொகை குழுவினருக்கு திருப்தி தராததால் தற்போது இந்த திரைப்படத்தை சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் சன் டிவியில் பூமி படத்தை வரும் தீபாவளி அன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது சன் நெக்ஸ்ட் தளத்திலும் படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று தெரிய வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.