1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி பாடப்புத்தகத்துல நடிகர் விஜயகாந்த் பத்தி வரணும் - ஜெயம் ரவி..!!

Q

சென்னையில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜெயம் ரவி, பள்ளி பாடப்புத்தகத்தில் விஜயகாந்த் பற்றி பாடம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார். அதோடு, மனிதன் என்றால் எப்படி வாழவேண்டும் என அந்த பாடம் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

இவ்விழாவில் பேசிய நடிகர் கமல், "பல விமர்சனத்தையும் அவமானத்தையும் அவர் சந்தித்திருக்கிறார். அவர் பட்ட அவமானங்களைப் பிறர் சந்திக்கக்கூடாது என நினைத்தார். அவர் கொடுப்பது பிறருக்குத் தெரியாது. எனக்கு அவரிடம் பிடித்த குணங்களில் ஒன்று, அவரின் நியாயமான கோபம். Good bye Captain!" என்றார்.

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, "கேப்டன் என்னைத் தயாரிப்பாளராக்கியவர். நடிகர் சங்கத் தேர்தலில் அவரை ராதாரவியும், வாகை சந்திரசேகரும் நிற்க வைத்தார்கள். அப்போது நடிகர் சங்கம் கடனில் இருந்தது. அப்போது மலேசியாவில் நடிகர் சங்க விழாவை நடத்தினார். நிகழ்ச்சி முடிவடைந்ததும் வசூல் குறித்து அங்குள்ள ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அவர் கேப்டனை ஏமாற்ற நினைத்தார். அப்போது விஜயகாந்த், அந்த ஏற்பாட்டாளரைப் பிடித்து சுவரில் அறைந்தார். அதன் பிறகே அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அந்தப் பெரிய தொகையை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். இப்படியாகப் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்காக அவர் தன் ரத்தத்தைச் சிந்தியிருக்கிறார்" என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like