ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ்… நிரந்தர முதல்வர் ஈபிஎஸ்! என்ன நடக்கிறது அதிமுகவில்?

சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ், நிரந்தர முதல்வர் ஈபிஎஸ் என இருவரின் ஆதரவாளர்கள் மாறி மாறி முழக்கமிட்டனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை அதிமுகவில் சமீபத்தில் எழுந்தது.அமைச்சர்கள் பலரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் என கருத்துகள் கூறி வந்த நிலையில், அதிமுகவின் உயர்மட்டக்குழு கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். அப்போது அங்கு கூடிய தொண்டர்கள்,ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ், நிரந்தர முதல்வர் ஈபிஎஸ் என மாறி மாறி முழக்கமிட்டனர்.
இதனால் கட்சிக்குள் சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் காரசாரமாக விவாதித்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிமுக தேர்தல் களத்திற்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது.
newstm.in